சனி, 16 ஏப்ரல், 2011

கோட்டைப் பட்டிணத்தில் உடல் ஒதுங்கியது.

'உருச்சிதைந்து அழுகிய நிலையில் ஒரு மனித உடல் கோட்டைப்பட்டிணத்துக்கு அருகில் கரை ஒதுங்கியது. ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்'

கோட்டைப்பட்டிணத்திலிருந்து ஜாகிர் தொலைபேசி மூலம் தகவல். மற்ற மூன்று மீனவர்களின் உடல் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

சனி, 9 ஏப்ரல், 2011

காணாமல் போன ராமேஸ்வரம் மீனவர்கள் - அடுத்த தகவல்கள்


அந்தோனி, மாரிமுத்து, விக்டஸ், இன்னொருவர். இவர்கள் 4 பேரும் கடலுக்குப் போனார்களாம். மூன்று உடல்கள் யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கியிருக்கின்றன. ஒருவரின் பெயரை (விக்டஸ்) அறிவித்து விட்டார்களாம். இன்னும் இரண்டு பேரைப்பற்றித் தெரியவில்லையாம்.

இது போல கிரிக்கெட் போட்டி நடக்கும் நாட்களில் அதிகமாக தாக்குதல்கள் நடக்கும் என்று மீனவர்கள் சொல்கிறார்களாம். உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்த அடுத்த நாள் நிறைய படகுகளில் மிரட்டினார்களாம்.

இன்று தங்கச்சி மடம் பகுதியில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்களாம். அந்த ஊர் தினத்தந்தியில் செய்தி வந்திருப்பதாகச் சொன்னார்.

தமிழ்நாட்டின், தேசிய ஊடகங்களில் இந்தச் செய்திக்கு இடமே இல்லாமல் போயிருக்கிறது!